பேரீச்சம் பழம் லட்டு
தேவையானவை:
பேரீச்சம் பழம் - 400 கிராம்.
நெய் - 1 1/2 தேக்கரண்டி
சர்க்கரை - தேவைக்கு ஏற்ப
பாதாம்பருப்பு - 10 (சுடுநீரில் ஊறவைத்து தோல்
உரித்துக் கொள்ளவும்)
முந்திரி பருப்பு - 10 ( பொடியாக நறுக்கியது)
வறுத்த வெள்ளை எள் - 1/3 கப்.
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: அடிகனமான பாத்திரத்தில்
நெய்யைச் சூடாக்கவும். பேரீச்சம்பழம்,
சர்க்கரை
2 தேக்கரண்டி, நீர் சேர்த்து 2 நிமிடம் சூடாக்கவும்
ஆறிய பின் மிக்ஸியில் கொர, கொரப்பாக
அரைத்து எடுக்கவும். அத்துடன் நறுக்கிய
முந்திரிப் பருப்பு, உப்பு சேர்த்து எலுமிச்சை
அளவு
உருண்டை பிடிக்கவும்.
நடுவில் ஒரு முழுப்பாதம் பருப்பை வைக்கவும்.
உருட்டிய இந்த பேரீச்சம்பழ லட்டை வெள்ளை
எள்ளில் புரட்டி எடுக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக