வியாழன், 13 ஆகஸ்ட், 2015

இட்லி - முக்கிய குறிப்புகள்

இட்லி பற்றிய முக்கிய குறிப்புகள்:
1. துணியில் மாவு இட்டு செய்யும் இட்லிகள் எண்ணெயே குடிக்காமல் இன்னும் சுவையாக இருக்கும். அப்படியும் செய்யலாம்.
2. இட்லிக்குத் துவையல், சட்னி, சாம்பார் செய்து பரிமாறலாம்.
3. இட்லிக்குத் தனியாக, தோசைக்குத் தனியாக என்று அரைக்க முடியாதவர்கள், அடி இட்லி மாவையே தோசைக்குப் பயன்படுத்தலாம்.
4. தோசை மாவிற்கு என்றால் அரிசி, பருப்பை ஒன்றாகவே அரைக்கலாம், ஆனால் கணிசம் மேற்கூறிய முறையில் தான் அதிகம் கிடைக்கும்.
5. தோசைக்கு நன்றாக அரைபட வேண்டும் என்ற மெனக்கெடல் இல்லை, நற நற பதமே போதுமானது.
6.சிலர் மேற்கூறிய முறையில் வெள்ளை உளுத்தம்பருப்பை அதிகம் சேர்ப்பார்கள், அவ்வாறு செய்வது இட்லிக்கு நல்லதாக இருக்கும், அதே மாவில் தோசை கல்லை விட்டு எடுக்க வராது.
7. குளிர்சாதனப்பெட்டியில் பருப்பை வைக்க நேரமில்லாதவர்கள் ஐஸ்கட்டிகளைப் போட்டு அரைக்கலாம். அவல் இட்லிக்கு மென்மையைத் தருகிறது.
8. இட்லி சரியாக வரவில்லை என்றால் ஒன்று பொங்கியிருந்திருக்காது, இல்லையென்றால் ஏதேனும் செய்முறையில் தவறுகள் நிகழ்ந்திருக்கலாம், ஒரு வேளை சொதப்பும் சூழல் நேரிட்டால் தோசைக்கு மாவைப் பயன்படுத்தலாம்.
மதுரை இட்லி, மல்லிகை பூ ,குஷ்பூ,ஜோதிகா, ஹன்சிகா இட்லிகள் என்று பெயரையும் சூட்டி விடுங்கள், எனக்கு, உனக்கு என்று காலியாகும், கண்டிப்பாகத் தொட்டுக் கொள்ள துவையலோ(சட்னி), சாம்பாரோ பண்ணி அசத்திவிடுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக