தேங்காய் பால் பணியாரம்
தேவையான பொருள்கள்
பச்சரிசி – 1/2 கப்
உளுந்து – 1/2 கப்
தேங்காய் – ஒன்று
பால் – ஒரு டம்ளர்
எண்ணெய் - பொரித்தெடுக்க தேவையான அளவு
ஏலக்காய் – தேவையான அளவு
சர்க்கரை – தேவையான அளவு
செய்முறை:
உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து 1 மணி நேரம் ஊறவைத்து நன்றாக மாவு பதத்திற்கு அரைக்கவும். தேங்காய் பால் எடுத்து வைத்து கொள்ளவும். அதனுடன் பால், ஏலக்காய் தூள், சீனி சேர்த்து கொள்ளவும். அரைத்து வைத்து இருக்கும் மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா கலந்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போடவும்
நல்ல பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும்.. தேவையான பணியாரத்தை எடுத்து தேங்காய் பால் சேர்த்து பரிமாறவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக