புதன், 12 ஆகஸ்ட், 2015

முட்டை Benefits



ஒரு முட்டையின் வெள்ளைக் கருவில் 17 

கலோரியும், மஞ்சள் கருவில் 59 கலோரியும் 

உள்ளது. உடலுக்குத் தேவையான அனைத்து 

வகையான ஊட்டச் சத்துக்களும் முட்டையில் 

உள்ளன. முக்கியமாக முட்டையில் தேவையான 

அளவு கொழுப்பு மற்றும் புரதச்சத்து 

நிறைந்துள்ளன.

முட்டையில் தைராய்டு ஹார் மோன் 

சுரப்பதற்குத் தேவையான அயோடின் உள்ளது. 

பற்கள் மற்றும் எலும்புகளுக்குத் தேவையான 

பாஸ்பரஸ் உள்ளது. காயங்களை குணமாக்கும் 

மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான 

துத்தநாகம் அதிகம் உள்ளது.

முட்டையில் கெட்ட கொலஸ்ட் ராலுடன் நல்ல 

கொலஸ்ட்ரால் அளவும், டிரைகிளிசரைடு 

அளவும் சக்தி வாய்ந்த தரத்துடன் இருக்கின்றன.

இதயத்திற்குப் பாதுகாப்பான ஃபோலிக் அமிலம் 

மற்றும் பி குரூப் வைட்டமின்களும், நச்சு முறிவு 

மருந்துகளும் செறிவில்லாத கொழுப் புகளும் 

முட்டையில் உள்ளன.


எடைக் குறைவான குழந்தை களுக்கு தினமும் 

ஒரு முட்டை கொடுப்பதன் மூலம் சத்துக்கள் 

கூடு வதோடு உடல் எடை அதிகரிக்கும்.


இதய நோயினர், சிறுநீரக செயலிழப்பு, கல்லீரல் 

செயலிழப்பு, முதுமை வயதினர், இரத்தக் 

கொழுப்பு நோயினர் போன்றோர் முட்டையின் 

மஞ்சள் கருவை நீக்கிவிட்டு வெண்கருவை 

(தினமும் இரண்டு) மட்டும் சாப்பிடலாம்.


தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதன் மூலம் 

குழந்தைகளின் மூளை வளர்ச்சி அதிகரிக்கும். 

முட் டையின் மஞ்சள் கருவில் உள்ள ஆண்டி 

ஆக்சிடென்டல் கண் பார்வையைத் 

தெளிவாக்கும்.

முட்டையில் உள்ள வைட்டமின் டி உயிர்ச் சத்து, 

எலும்பு வளர்ச் சிக்கு பங்காற்றுகிறது.

முட்டையில் கொலஸ்ட்ரால் இருப்பது உண்மை. 

ஆனால், அதை அளவுடன் சாப்பிட்டால், 

இதயத்திற்கு எந்தவிதமான கெடுதலையும் 

செய்யாது. நீரிழிவு நோயினர் மருத்துவர்களின் 

ஆலோசனையின் படி வாரம் ஒரிரு முட்டை 

மட்டுமே சாப்பிடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக