சனி, 15 ஆகஸ்ட், 2015

ஓட்ஸ் சூப்

ஓட்ஸ் சூப்

தேவையானவை

ஓட்ஸ் - 1 கிண்ணம்

வெங்காயம் - 1

தக்காளி - 2

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் -1 தேக்கரண்டி

பட்டை - சிறிய துண்டு

பூண்டு - 5 பல்

தனியா தூள் - 1 தேக்கரண்டி

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை : எண்ணெய் காய்ந்ததும் பட்டை, 

சீரகம் தாளித்து பொடியாக நறுக்கிய 

வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து 

வதக்கவும். நன்றாக வதங்கியதும் பூண்டை 

தட்டி 

சேர்க்கவும். இரண்டு நிமிடம் வதங்கிய பிறகு 

ஓட்ஸ் சேர்க்கவும். அத்துடன் நான்கு கிண்ணம் 

தண்ணீர், உப்பு மற்றும் தனியா தூளையும் 

சேர்த்து கொதிக்க விடவும். வெந்ததும் மிளகை 

ஒன்றிரண்டாகப் பொடித்து சேர்த்து பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக