வியாழன், 13 ஆகஸ்ட், 2015

ஓட்ஸ் ரவா இட்லி

ஓட்ஸ் ரவா இட்லி
என்னது ஒட்ஸ் இட்லியா???இது எல்லாம் கொஞ்சம் ஒவராக தெரியவில்லையா…...என நான் கேட்டவுடன் “ஆமாம்!! ஆமா…சாப்பிட்டு பாருங்கள்..”என்று சொன்னால். அதை சாப்பிட்டுவிட்டு நாணும் நன்றாக இருக்கின்றது என்று 
சொன்னேன். 
எப்பொழுதும் அரிசியில் இட்லி செய்து போரடித்துவிட்டால் இப்படி எதாவது விதவிதமாக் செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. இந்த ஒட்ஸ் இட்லியினை நீங்களும் செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும்.
அதிலும் முக்கியமாக உடல் எடையினை குறைக்க விரும்புபவர்கள் இதனை செய்து சாப்பிடலாம்.
இதனை சட்னியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்
தேவையான பொருட்கள் :
ஓட்ஸ் - 1 கப் 
கோதுமை ரவை - அரை கப் 
தயிர் - அரை கப்
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - 1 ஸ்பூன் 
கடுகு - கால் தேக்கரண்டி 
ப.மிளகாய் - 2 
கருவேப்பிலை - சிறிதளவு 
இஞ்சி - சிறிய துண்டு
செய்முறை :
• முதலில் ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு 3 நிமிடம் வறுத்து ஆற வைத்து பொடித்து கொள்ளவும்.
• கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வறுத்துக் கொள்ளவும்
• இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் பொடித்த ஓட்ஸ், வறுத்த ரவை, தயிர், தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
• கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து இஞ்சி, ப.மிளகாயை போட்டு தாளித்து கலந்து வைத்துள்ள மாவில் கொட்டி நன்றாக கலக்கவும்.
• மாவை இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
• சுவையான, சத்தான ஓட்ஸ் ரவா இட்லி ரெடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக