செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

மஷ்ரூம் காப்சிகம் மசாலா



MUSHROOM CAPSICUM MASALA

மஷ்ரூம் காப்சிகம் மசாலா

தேவையான பொருட்கள் :

மஷ்ரூம் - 250 ௦ கிராம்

காப்சிகம் – 3 எண்ணம் ( பருத்தது )

பெரிய வெங்காயம் – 3 எண்ணம்

தக்காளி -2 எண்ணம்

இஞ்சி – ஒரு பாக்கு அளவு

பூண்டு -2 பல்

பச்சை மிளகாய் - 3 எண்ணம்

ஏலக்காய் -2 எண்ணம்

லவங்கம் – 2 எண்ணம்

பட்டை – சிறிதளவு

முந்தரி பருப்பு- 3 எண்ணம்

தேங்காய் துருவல் – 3 எண்ணம்

மல்லி தழை : தேவையான அளவு

மஞ்சள் பொடி- மிக சிறிதளவு

செய்முறை :

வெங்காய தக்காளி கலவை : 

முதலில் பெரிய வெங்காயத்தையும், 

தக்காளியையும் நறுக்கி வைத்து கொள்ளவும் .

கடாயில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி 

வெங்காயம் பின்பு இஞ்சி ,பூண்டு அதன்பின்

தக்காளி போட்டு நன்கு வதக்கவும் .அடுப்பை 

அணைத்த பின் , மல்லி தழையையும் நறுக்கி

அதன் மேல் இட்டு கிளறி விட்டு ஆற வைக்கவும் .

ஆறிய பின் இக்கலவையை மிக்ஸ்யில் இட்டு 

நன்றாக அரைத்து தனியே எடுத்து வைத்து 

கொள்ளவும் .

தேங்காய் கலவை 

முந்தரி பருப்பு , ஏலக்காய் , பட்டை, லவங்கம் 

போட்டு பொடியாக்கி விட்டு , பின் அதனுடன் 

தேங்காய் துருவல், பச்சை மிளகாய் போட்டு 

விழுதாக அரைத்து வைத்து கொள்ளவும் .

மசாலா தயாரிப்பு :

கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய மஷ்ரூம் 

போட்டு , சிறிதளவு உப்பும் , மஞ்சள் பொடியும் 

போட்டு கிளறவும் .

மஷ்ரூம் விரைவில் வெந்து விடும் . எனவே 

நிறைய நேரம் எடுத்து கொள்ள வேண்டாம் . அது 

வெந்தவுடன் , அரைத்து வைத்த தக்காளி 

வெங்காய கலவையை அதனோடு சேர்க்கவும். 

பின் அரைத்து வைத்த தேங்காய் கரம் மசாலா 

கலவையையும் அதனோடு சேர்க்கவும் .


இறுதியாக பொடியாக நறுக்கிய காப்சிகம் அதன் 

மேல் தூவி விட்டு நன்றாக கிளறவும் . காப்சிகம் 

முழுவதுமாக வேக வேண்டாம் .

பின் அடுப்பை அணைத்து விட்டு , நறுக்கிய 

மல்லிதழையை தூவி விடவும்.


மஷ்ரூம் காப்சிகம் மசாலா ரெடி .

இது அனைத்து ரொட்டி வகையறாக்களுடன் 

சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக