
PUMPKIN HALWA
பூசணிக்காய் ஹல்வா
பூசணி துருவல் - ஒரு கப்
சர்க்கரை - கால் கப்
முந்திரி - ஐந்து
ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி
ரெட் கலர் பொடி - ஒரு பின்ச்
சுண்டிய பால் - அரை கப்
நெய் - மூன்று தேக்கரண்டி
இரண்டு தேக்கரண்டி நெய்யை சூடுப்படுத்தி
முந்திரியை பொடியாக நறுக்கி வறுத்து எடுத்து
தனியாக வைக்கவும்.
அதே நெய்யில் பூசணி துருவலை நல்ல வதக்கி
சுண்டிய பால் சேர்க்கவும்.
இப்போது சுருண்டு வரும் போது ஏலக்காய் தூள்,
ரெட் கலர் பொடி சிறிது பாலில் கரைத்து ஊற்றி,
சர்க்கரையும் சேர்த்து கிளறி ஹல்வா பதம்
வரும்
வரை கிளறி கடைசியில் மீதி உள்ள நெய்,
வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக