செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

மிக்சட் ப்ரூட் ஹல்வா




MIXED FRUIT HALWA
பேரிச்சம்பழ ஹல்வா போல், மிக்சட் ப்ரூட் ஹல்வாவும் செய்யலாம். இந்த ஹல்வாவை குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள். 
தேவையானவை:
200gms பேரிச்சம்பழம (விதைகளை எடுக்கவும், துண்டுகள் போடவும் )
2cup டுட்டி பிரூட்டி 
1cup உலர்ந்த திராக்ஷை 
2cup உடைத்த பாதாம், பிஸ்தா, முந்தரி துண்டங்கள்.
2cup உலர்ந்த அத்திப்பழம் (துண்டுகளாக்கவும்)
1 தேக்கரண்டி செர்ரி (தேனில் ஊறவைத்து கடையில் கிடைக்கும் , வாங்கி துண்டுகளாக்கவும் )
1tin Condensed milk ( milkmaid tin )
2 தேக்கரண்டி நெய்
2 தேக்கரண்டி மைதா / corn flour 
1cup சர்க்கரை 
1 cup தண்ணீர்
செய்முறை:
ஒரு வாணலியில் நெய் விட்டு மைதாவை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
உடனே தண்ணீர் விட்டு கிளறவும்.
அது கொதித்து அடங்குமுன், பேரிச்சம்பழ துண்டுகள், டுட்டி பிரூட்டி,உலர்ந்த திராக்ஷை, உடைத்த பாதாம், பிஸ்தா, முந்தரி துண்டங்கள்,உலர்ந்த அத்திப்பழம், செர்ரி போடவும்.
பின் Condensed milk ஊற்றவும் , சர்க்கரை சேர்க்கவும்.
நன்கு கிளறவும்.
நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது, நெய் தடவிய தட்டில் கொட்டவும். 
ஆறினதும் துண்டம் போடவும்.
அவ்வளவுதான் மிக்சட் ப்ரூட் ஹல்வா ரெடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக