
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு...
என்னென்ன தேவை?
1 டீஸ்பூன் தனியா தூள்,
1 டீஸ்பூன் மிளகாய் தூள்,
அரை டீஸ்பூன் உப்பு,
3 டீஸ்பூன் எண்ணெய்
கத்தரிக்காய்- தேவைக்கு
பெரிய வெங்காயம்
பூண்டு
தக்காளி
புளி
சாம்பார் தூள் 1 டீஸ்பூன்
எப்படி செய்வது?
மேலே குறிப்பிட்ட பொருட்கள் ஆகியவற்றை
ஒன்றாகக் குழைக்கவும். தேவையான
கத்தரிக்காய்களை நான்காக வகிர்ந்து
கொள்ளவும். குழைத்து வைத்துள்ளதை
கத்தரிக்காயின் உள்ளே நிரப்பவும். குக்கரில் 6
டீஸ்பூன் நல்லெண்ணெய், பொடியாக நறுக்கிய
வெங்காயம், 5 பல் பூண்டு, நறுக்கிய தக்காளி 2,
தயாராக உள்ள கத்தரிக்காய் எல்லாவற்றையும்
போடவும். நெல்லிக்காய் அளவு புளி, 1 டீஸ்பூன்
தனியா தூள், 1 டீஸ்பூன் சாம்பார் தூள், அரை
டீஸ்பூன் உப்பு சேர்த்து, மீடியமான தணலில் 2
விசில் வைக்கவும். விசிலை எடுத்ததும்,
கத்தரிக்காய்களை தனியே எடுத்துவிட்டு,
மசாலா கலவையை நன்கு மசித்து பிறகு
கத்தரிக்காயுடன் சேர்த்துப் பரிமாறவும்.
தேவைப்பட்டால் ரெடிமேட் தாளிப்பு சேர்த்துக்
கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக