திங்கள், 14 செப்டம்பர், 2015

ஆரோக்கியம் தரும் 10 உணவுகள்




வாங்க சாப்பிடலாம்..!

உடலுக்கு ஆரோக்கியம் தரும் 10 உணவுகள்
பொதுவாக காய்கறிகளும், பழங்களும், முட்டை, மீன், கறி வகைகளும் உடலுக்கு நன்மை பயக்கும் வகையில் தான் உள்ளன. அவற்றை சரியான அளவில், அதற்கேற்றவாறு சமைத்து சாப்பிட்டால் அதில் உள்ள அனைத்து சத்துக்களும் உடலுக்கு கிடைக்கும்.
அந்த வகையில், உடலுக்கு நன்மை அளிக்கும் முக்கியமான 10 உணவுகளை இங்கே பட்டியலிடுகிறோம்.

ரைத்தா :
ரைத்தா என்றதுமே.. என்ன ரைத்தாவா.. இதில் என்ன இருக்கிறது என்று கேட்கலாம். ஆனால் உண்மையில் இதில் நிறைய இருக்கிறது. தயிரில் வெங்காயம் அல்லது வெள்ளரி அல்லது தக்காளி மற்றும் காய்கறிகளை சேர்த்து ரைத்தா செய்யலாம். இதன் மூலம் ரைத்தாவில் சேர்க்கப்படும் தயிர் முதல் காய்கறி, பழம் வரையிலான அனைத்துப் பொருட்களின் சத்துக்களும் எந்த விதத்திலும் வீணாகாமல் உடலுக்குக் கிடைக்கிறது.

மோர் :
உடல் சூட்டைத் தணிக்கவும், உடலுக்குத் தேவையான சக்தியை உடனடியாக அளிக்கவும் மோர் பயன்படுகிறது. அவ்வாறான மோரில் குறைந்த கொழுப்புச் சத்து இருப்பது மேலும் நன்மை அளிக்கிறது.

பருப்பு :
பருப்பு வகைகளில் ஏராளமான புரதச் சத்து உள்ளது. இவை உடலுக்குத் தேவையான புரதத்தை அளிக்கின்றன. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பருப்பு வகைகளை உண்ணலாம்.

தந்தூரி சிக்கன் :
தயிர் மற்றும் மசாலா கலந்து நன்கு ஊறவைத்து தீயில் வெந்த தந்தூரி சிக்கன் உடலுக்கு நல்ல ஊட்டத்தை அளிக்கும். இதில் அதிகப்படியான எண்ணெய் இல்லாததால் தேவையற்ற கொழுப்பு சேர்வதில்லை.

ராஜ்மா :
வட இந்தியர்கள் அதிகம் விரும்பி உண்ணும் உணவு ராஜ்மா. தற்போது நம்மூர்களிலும் அதிகம் விற்பனையாகிறது. இது குழந்தைகளுக்கு பிடித்த உணவாக உள்ளது. இதில் அதிகமான புரதச் சத்து உள்ளது.

அத்திப்பழம் :
பழச்சாறு என்றாலே நாம் பொதுவாக ஆப்பிள், ஆரஞ்சு பழங்களையே நாடுவோம். ஆனால் ஒரு முறை அத்திப்பழ சாறு பருகிப் பாருங்கள். இதில் வயிற்றுக்கு நன்மை பயக்கும் நிறைய விஷயங்கள் உள்ளன.

மூக்கடலை :
மூக்கடலையில் இரண்டு வகை உள்ளது. இரண்டிலுமே நிறைய சத்துக்கள் உள்ளன. இதனை வேக வைத்து குழந்தைகளுக்கு அளிக்லாம். மேலும், முதல் நாள் இரவில் ஊற வைத்து, மறுநாள் தண்ணீரை வடித்துவிட்டு பகல் பொழுதில் எடுத்து பார்த்தால் முளை விட்டிருக்கும். இதனை பச்சையாக சாப்பிடுவது உடலுக்கு பலத்தை அளிக்கும்.

காராமணி :
முந்தைய காலத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்த காராமணி தற்போது பல வீடுகளில் பயன்படுத்தப்படுவதே இல்லை. முந்தைய நாள் இரவில் ஊறவைத்து மறுநாள் வேகவைத்து சமையலில் பயன்படுத்த வேண்டும். இது குழந்தைகளுக்குத் தேவையான உடல் பலத்தை அளிக்கும்.

கீரைகள் :
கீரைகள் என்றதும் அதைப் பற்றி சொல்லவேத் தேவையில்லை. ஒவ்வொரு வகை கீரையிலும் பல சத்துக்கள் உள்ளன. வாரத்தில் குறைந்தது 3 நாட்களாவது கீரை சேர்த்துக் கொண்டால் நோய் நம்மை அண்டாது.

மீன் வகை :
மீன்களில் காணப்படும் பல்வேறு விஷயங்கள் உடலுக்கு நன்மை அளிப்பதாக உள்ளன. அசைவ பிரியர்கள் அவ்வப்போது மீன்களை உண்பது நல்லது.

ஊட்டச்சத்து: தெரிந்ததும் தெரியாததும்!




எப்படிச் சாப்பிட வேண்டும்?- ஊட்டச்சத்து: தெரிந்ததும் தெரியாததும்!
எது ஊட்டச்சத்து, ஒரு வேளைக்கு-ஒரு நாளைக்கான உணவை எப்படித் திட்டமிட வேண்டும், குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சினை உள்ளவர்கள் எப்படிப்பட்ட உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது போன்ற கேள்விகளுக்கான விடைகளைத் தெரிந்துகொண்டால், ஊட்டச்சத்தைப் பற்றி புரிந்துகொள்ளலாம். ஊட்டச்சத்து தொடர்பான சில பொதுவான சந்தேகங்களுக்கு, விடைகள் இதோ:
சத்தான உணவு என்பது எது?
புரதம், மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்), கொழுப்பு, வைட்டமின்கள், தாதுகள் ஆகிய சத்துகள் உடலுக்கு இன்றியமையாதவை. ஒன்றிணைந்த இந்தச் சத்துகளின் மூலமாக உடல் வளர்ச்சி, செயல்திறன் போன்றவை கிடைக்கின்றன.
சமச்சீரான உணவு எது?
நாம் தினமும் சாப்பிடும் உணவில் புரதம், மாவுச்சத்து, கொழுப்பு, வைட்டமின்கள், தாதுகள் ஆகியவை தேவையான அளவில் இருப்பதைச் சமச்சீரான உணவு என்கிறோம். தானியங்கள், பயறு வகைகள், இறைச்சி சார்ந்த பொருட்கள், காய்கறிகள், பழங்கள், ஆகியவற்றைக் கலந்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக்கொண்டால், நமக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் கிடைத்துவிடும். ஏதாவது ஒன்றை மட்டும் அதிகம் உட்கொள்வதால் உடலுக்குத் தேவையான சத்துகள் அனைத்தும் கிடைக்காது, இதனால் ஊட்டச்சத்துக்குறைவு போன்ற உடல்நலப் பிரச்சினைகளும் ஏற்படலாம். அல்லது ஏதேனும் சில சத்துகள் தேவைக்கு அதிகமாகச் சேர்ந்து உடல் பருமன் போன்ற பிரச்சினைகளை உண்டுபண்ணும்.
சமச்சீரான உணவில் இருக்க வேண்டிய கலோரியின் அளவு என்ன?
மாவுச்சத்திலிருந்து 50-லிருந்து 60 சதவீதம் கலோரியும், புரதத்திலிருந்து 10 முதல் 15 சதவீதக் கலோரியும், கொழுப்பு வகைகளிலிருந்து 20 முதல் 30 சதவீதம் கலோரியும் நமக்குக் கிடைக்க வேண்டும்.
செயற்கையான சுவையூட்டிகளில் சேர்க்கப்படும் சர்க்கரை, காஃபீன் ஆபத்தானதா?
செயற்கையான சர்க்கரை, காஃபீன் போன்றவற்றைச் சத்துணவுகளில் சேர்ப்பது பெரும் ஆபத்தாக முடியும். இவை உடல் செயல்பாடுகளை, பல்வேறு வகைகளில் பாதிக்கின்றன. குறிப்பாகச் செயற்கை சர்க்கரையைத் தொடர்ந்து பல வருடங்களுக்குப் பயன்படுத்தும்போது புற்றுநோய் ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதீதச் சர்க்கரை உடல்பருமன், நீரிழிவு நோய் போன்றவற்றையும், காஃபீன் பக்கவாதம், வலிப்பு சார்ந்த பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம்.
சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெயால் உடலுக்கு நலம் கிடைக்குமா?
ஒரேயொரு எண்ணெயைப் பயன்படுத்திச் சமைப்பதைவிட, இரண்டு வகையான எண்ணெயைப் பயன்படுத்திச் சமைப்பதால் ஆரோக்கியம் கிடைக்கும். உதாரணத்துக்குக் கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ரைஸ்-பிரான் (அரிசி தவிட்டு) எண்ணெய் ஆகியவற்றை ஒவ்வொரு வாரத்துக்குச் சுழற்சிமுறையில் பயன்படுத்துவதன் மூலம் கொழுப்பு அதிகரிப்பதில்லை. உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்கள் கிடைக்கும். எனவே, உடல் ஆரோக்கியம் மேம்படும்.
தக்காளி, கீரை சாப்பிடுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகுமா?
தக்காளி, கீரை வகைகளைச் சாப்பிடுவதன்மூலம் ஒருவருக்குச் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாது. இது தேவையற்ற பயம். ஆனால், ஏற்கெனவே சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் இவற்றைத் தவிர்ப்பது நலம். காரணம், இந்த இரண்டிலும் சிறுநீரகக் கல்லை உருவாக்கக்கூடிய ஆக்சலேட்டுகள் அதிகம்.
தேவைக்கு அதிகமான உப்பைச் சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் உயருமா?
உப்பு சுவை சார்ந்த ஒவ்வாமை உள்ளவர்களுக்கு அதிக உப்பால் ரத்த அழுத்தம் நிச்சயம் அதிகரிக்கும். ஒவ்வாமை இல்லாதவர்கள் உப்பு அதிகம் சாப்பிட்டாலும் ரத்த அழுத்தம் உயரும்.
சத்துணவில் பழங்கள் மற்றும் பழச்சாறின் பங்கு என்ன?
எளிமையாக ஜீரணமாகும் பானங்களில் பழச்சாறு முதன்மையானது. ஒரு டம்ளர் பழச்சாறு அருந்தும்போது, ஒரு பழத்தைச் சாப்பிடும்போது கிடைக்கும் சத்து கிடைக்கும். ஒரு நாளைக்கான வைட்டமின் 'சி' தேவையை இது நிறைவேற்றும். பழச்சாறைக் குடிக்கும்போது நார்ச்சத்தும் கிடைக்கிறது. பழச்சாறில் இருக்கும் சர்க்கரை, வைட்டமின்கள், புரதம், தாதுகள் ஆகியவை உடனடியாக ரத்தத்தின் செல்களில் கலக்கும். மலச்சிக்கலைப் போக்குவதற்கும் இது பயன்படுகிறது.
சுண்ணாம்புச் சத்தின் தேவை என்ன?
எலும்பின் உறுதித்தன்மைக்குச் சுண்ணாம்புச் சத்து அவசியம். பால், பால் பொருட்கள், பசுமையான கீரைகள், முட்டை ஆகியவற்றிலிருந்து சுண்ணாம்புச் சத்து கிடைக்கிறது.
குழந்தைகளுக்குத் தாய்ப்பாலின் முக்கியத்துவம் என்ன?
புரதம், கொழுப்பு, லாக்டோஸ், வைட்டமின்கள், பலவகையான தாதுகள், தண்ணீர், என்சைம்கள் ஆகியவற்றின் கூட்டு வடிவமே தாய்ப்பால். குழந்தைக்குத் தாய்ப்பாலே முதன்மையான முழு சத்துகள் அடங்கிய உணவு. நோய் எதிர்ப்பு சக்தியையும் பல தொற்றுகளிலிருந்து தடுக்கும் ஆற்றலையும் குழந்தைக்கு அளிக்கும் தாய்ப்பால், எளிதில் ஜீரணமும் ஆகிறது.
l எளிய முறையில் சமைக்கப்பட்ட புதிய உணவையே உட்கொள்ளுங்கள்.
l வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பச்சை காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிடுவதற்குத் தயங்காதீர்கள். ஆவியில் வேக வைத்த உணவை உண்பதை வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். கூடியமட்டும் எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிருங்கள்.
l பழங்களையும் காய்கறிகளையும் தோலோடு சாப்பிடுங்கள். கேரட் போன்றவற்றை மேல் தோல் சீவி, நன்றாக நீரில் கழுவிய பின் சாப்பிடலாம்.
l சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்துக்கு முன்பாகவே காய்கறி, பழங்களைக் கழுவி, துண்டு துண்டாக நறுக்கி வைக்காதீர்கள். இப்படிச் செய்வதால் சத்து இழப்பு ஏற்படும்.
l பாரம்பரியமாக வீட்டில் சமைக்கப்படும் உணவை உண்ணுங்கள். துரித உணவை நாடாதீர்கள்.
l சாப்பாட்டுக்குப் பதிலாக நொறுக்கு தீனிகளைச் சாப்பிடாதீர்கள்.
l உணவில் சர்க்கரையின் அளவை குறைத்துக்கொள்ளுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவைச் சாப்பிடுவதைத் தவிருங்கள்.
=யுகன்

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

சிக்கன் fry குழம்பு


வறுத்த சிக்கன் குழம்பு க்கான பட முடிவு


என்னென்ன தேவை?


சிக்கன் - அரைக் கிலோ


வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்:


வர மிளகாய் - 8

மல்லி - 4 தேக்கரண்டி

சோம்பு - 2 தேக்கரண்டி

சீரகம் - ஒரு தேக்கரண்டி

இஞ்சி - 3 இன்ச் அளவு

பூண்டு - 10 பல்

சின்ன வெங்காயம் - 10

தேங்காய் - ஒரு கப்



தாளிக்க தேவையான பொருட்கள்:


பட்டை - 2 துண்டு

கிராம்பு - 2

பெரிய வெங்காயம் - ஒன்று

தக்காளி - 3


எப்படி செய்வது?


சிக்கனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். 

பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை சிறு 

சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 

சுத்தம் செய்த கோழியுடன் அரை தேக்கரண்டி 

மிளகாய் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து 

அரை மணி நேரம் ஊற வைக்கவும். கடாயில் 2 

தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வர 

மிளகாய், மல்லி, சோம்பு, சீரகம், இஞ்சி, பூண்டு, 

சின்ன வெங்காயம் ஆகியவற்றை போட்டு 

வறுக்கவும். 


இறுதியில் தேங்காய் சேர்த்து வதக்கி விட்டு 

எடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். 

பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் 

ஊற்றி பட்டை, கிராம்பு, பொடியாக நறுக்கிய 

வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும். 

பின்னர் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை 

ஊற்றி ஒரு கொதி வந்ததும் ஊற வைத்த 

சிக்கனை சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு 

கொதித்து, சிக்கன் நன்றாக வெந்து, எண்ணெய் 

பிரிந்ததும் அடுப்பை அணைத்து விடவும். 

சுவையான வறுத்த சிக்கன் fry குழம்பு  ரெடி. 


புதன், 26 ஆகஸ்ட், 2015

ஓமம் பிஸ்கட்


ஓமம் பிஸ்கட்

*ஓமத்தில் கால்சியம் , பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின்(Carotin), தையாமின்(Thiamin), ரிபோபுளேவின்(Rhiboflavin) மற்றும் நியாசின்(Niacin) போன்றவை அடங்கியுள்ளன.

இதில் பிஸ்கட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்...

தே.பொருட்கள்
மைதா மாவு - 2கப்
வெண்ணெய் - 50 கிராம் அறை வெப்பநிலையில்
ஓமம் -2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
சர்க்கரை -2 டேபிள்ஸ்பூன்
பால் - மாவு பிசைய தேவையானளவு
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்(அ)பேக்கிங் சோடா- 1/2 டீஸ்பூன்

செய்முறை:

*ஒரு பவுலில் பால் தவிர அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.

*தேவையானளவு பால் தெளித்து சப்பாத்திமாவு பதத்தில் கெட்டியாக பிசையவும்.

*2 பங்காக மாவை பிரித்து மெலிதாக இல்லாமலும்,தடிமனாக இல்லாமலும் உருட்டவும்.

*குக்கீ கட்டரால் விரும்பிய வடிவில் வெட்டவும். (என் பொண்ணுதான் குக்கீ கட்டரால் கட் செய்து கொடுத்தாங்க).

*பிஸ்கட் உப்பாமல் இருக்க அங்கங்கே முள் கரண்டியால் குத்தி விடவும்.

*அவன் டிரேயில் அடுக்கி 180°C டிகிரியில் 15 - 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

பி.கு

பிஸ்கட் சூடாக இருக்கும் போது மெத்தென்று இருக்கும்.ஆறியதும் க்ரிஸ்பியாக இருக்கும்

ஓம தண்ணீர்



ஓம தண்ணீர்---தீரும் நோய்கள்:

ஓம தண்ணீர்

தேவையானது
1. ஓமம் - 1,000 கிராம்
2. தண்ணீர்- 10 லிட்டர்

செய்முறை:

ஓமத்தை ஒன்றிரண்டாகப் பொடித்துத் துணியில் மூட்டை கட்டி பன்னிரண்டு மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் இறக்கி, அது பாதியாக நீர் சுண்டும் வரையில் கொதிக்க வைத்து அதனை வடி கட்டி உபயோகிக்கவும்.

அளவும் அனுபானமும்:

15 முதல் 30 மில்லி வரை சம அளவு தண்ணீரில் கலந்த இரு வேளைகள் குடிக்க நோய்கள் தீரும்.

தீரும் நோய்கள்:

வயிற்றுப் போக்கு, செரியாமை , பசியின்மை , நாட்பட்ட பேதி அல்லது பெருங்கழித்தல் , சிறுநீர்ப்பை நோய்கள்.
------------------------------------------------------------------------------
தேவையானது

ஓமம் : 2 தேக்கரண்டி
நீர் - 1 கப்

செய்முறை:

2 தேக்கரண்டி ஓமத்தை லேசாக வறுத்து நன்றாக பொடி செய்து 1 கப் தண்ணீர் விட்டு பாதியாக நீர் சுண்டும் வரையில் கொதிக்க வைத்து அதனை வடி கட்டி உபயோகிக்கவும்.

வடிகட்டிய ஓம தண்னீரை ஒரு டீ ஸ்பூன் இரு வேளைகள் குடிக்க நோய்கள் தீரும்

தீரும் நோய்கள்:

வயிற்றுப் போக்கு, செரியாமை , பசியின்மை , நாட்பட்ட பேதி அல்லது பெருங்கழித்தல் , சிறுநீர்ப்பை நோய்கள்.


முள்ளங்கி ஓமம் சப்பாத்தி



முள்ளங்கி ஓமம் சப்பாத்தி

தேவையான பொருட்கள்....

கோதுமை மாவு - 1 கப்
முள்ளங்கி - 2 பெரியது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
ஓமம் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
தனியா தூள் - அரை ஸ்பூன்
கரம் மசாலா தூள் - அரை ஸ்பூன்

செய்முறை...

• முள்ளங்கியை கழுவி தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்

• ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஓமத்தை போட்டு சிறிது கிளறி மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் போட்டு கிளறி விட்டு அடுப்பை அணைத்து விடவும்

• ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு, அதில் துருவிய முள்ளங்கி, கடாயில் உள்ள மசாலா, தேவையான அளவு உப்பு போட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்..(முதலில் மாவில் தண்ணீர் ஊற்ற கூடாது. முள்ளங்கியில் உள்ள தண்ணீரே போதுமானது.)

• மாவை சப்பாத்திகளாக உருட்டி தோசை கல்லில் போட்டு சுட்டு எடுக்கவும்.

• சுவையான சத்தான முள்ளங்கி ஓமம் சப்பாத்தி ரெடி

குறிப்பு- மாவை விட முள்ளங்கி அதிகமாக இருக்க வேண்டும்.


செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

குதிரை வாலி சில்லி ஃப்ரைடு ரைஸ்

குதிரை வாலி சில்லி ஃப்ரைடு ரைஸ் (2)

தேவையானவை:
குதிரைவாலி - 1 கிலோ
குடமிளகாய் - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 5
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
நெய் - 100 கிராம்
எலுமிச்சை பழம் - 1
மசாலாப் பொடி - 1தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: குடமிளகாய், வெங்காயம் எல்லாவற்றையும் நீள வாக்கில் மெலிதாக நறுக்கி தனித்தனியே வைக்கவும். எலுமிச்சம்பழம் பிழிந்து விதை நீக்கி வைக்கவும். குதிரைவாலியை 1 மணி நேரம் ஊறவைத்து சாதமாக வடித்து எடுத்து 2 தேக்கரண்டி நெய், சிறிது உப்பு சேர்த்து சாதத்தை பரப்பி ஆர விடவும். பிறகு வெங்காயம்,
குடமிளகாயை வதக்கி அத்துடன் சீரகத்தூள், கரம் மசாலா போன்றவற்றைச் சேர்த்து வதக்கி சாதத்தில் கொட்டி நன்றாகக் கலக்க, கமகம குதிரைவாலி சில்லி ஃப்ரைடு ரைஸ் தயார்.

சுண்டைக்காய் புளிக் குழம்பு (1)

சுண்டைக்காய் புளிக் குழம்பு (1)
தேவையானவை:
சுண்டைக்காய் - 1/4 கிண்ணம்.
தேங்காய்த் துருவல் 1/4 கிண்ணம்.
பயற்றம் பருப்பு - 2 தேக்கரண்டி
மிளகாய்ப் பொடி - அரை தேக்கரண்டி
மல்லிப்பொடி - 1/4 தேக்கரண்டி
புளிக்கரைசல் - 1/4 கிண்ணம்.
நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் நறுக்கியது - 1/4 கிண்ணம்.
உப்பு, கடுகு, கறிவேப்பிலை தேவையான அளவு.
செய்முறை: பச்சை சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அரிசி கழுவிய தண்ணீரில் போட்டு நன்கு கழுவி எடுத்து, அத்துடன் பயற்றம் பருப்பையும் போட்டு 1 கிண்ணம் தண்ணீர் கலந்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து எடுத்து, மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி கலந்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் வெந்த சுண்டைக்காய் கலவை, அரைத்த தேங்காய் கலவை, புளிக்கரைசல் இவற்றை விட்டு 1 கிண்ணம் தண்ணீர் சேர்த்துக் கிளறி 10 நிமிடம் கொதிக்கவிடவும். எண்ணெய் மிதக்க ஆரம்பித்ததும் உப்பு, கறிவேப்பிலையைப் போட்டு நன்கு கிளறி இறக்கிவிடவும்.
இக்குழம்பானது சுடுசோறு, இட்லி, ஆப்பம், தோசைக்கு, தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். மேலும் பச்சை சுண்டக்காய் மருத்துவ குணம் கொண்டதால் அனைவருக்கும் ஏற்றது.

சனி, 22 ஆகஸ்ட், 2015

எத்தனை முட்டை சாப்பிடலாம் ????




ஆணழகன் போட்டி மற்றும் போலீஸ் 

வேலைக்குத் தயாராகிறவர்கள் பெரும்பாலும் 

முட்டைகளை அடுக்கடுக்காக உடைத்துக் 

குடித்து ஆற்றல் பெறுவதைப் போல பல 

திரைப்படங்களில் பார்த்திருப்போம்.

இப்படி, உடலை கட்டுமஸ்தாக வைத்திருக்க 

வேண்டியவர்களுக்கு முட்டை ஒரு 

அத்தியாவசிய உணவு என்றும், தினமும் ஒரு 

முட்டை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமான 

உடல்நலத்தைப் பெறலாம் என்றும் 

சொல்லப்படுகிறது. அதே வேளையில், 

‘முட்டையின் வெள்ளைக்கரு நல்லது, மஞ்சள் 

கருவை சாப்பிடக்கூடாது’ என்றும் 

சொல்கிறார்களே... இது எந்த அளவு உண்மை?


ஒருவருக்கு ஒரு நாளைக்கு எத்தனை முட்டை 

அனுமதி?

‘‘பாடி பில்டர்கள் டஜன்கணக்கில் முட்டை 

சாப்பிட்டாலும், அதற்கேற்ற கடுமையான 

உடற்பயிற்சிகளை மேற்கொள்வதால் 

அவர்களுக்கு எவ்வித பிரச்னைகளும் 

ஏற்படாது. 

தசைகள் செழுமையாகத் தெரிவதற்கு புரதம் 

அவசியம். முட்டையின் வெள்ளைக்கருவில் 

புரதச்சத்து அதிகமாக இருக்கிறது. இதன் 

காரணமாகவே பாடி பில்டர்ஸ் அடுக்கடுக்காக 

முட்டைகளை உடைத்துக் குடிக்கிறார்கள். 

ஒருவர் எத்தனை முட்டை சாப்பிட வேண்டும் 

என்பதை அவரது வாழ்வியல் சூழலை 

வைத்துதான் முடிவு செய்ய முடியும்.

கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்கள் 

ஒரு நாளைக்கு ஒரு முட்டை எடுத்துக் 

கொண்டாலே போதும். உடல் உழைப்பு 

அதிகமுள்ள வேலைகளில் இருப்பவர்கள் ஒரு 

நாளைக்கு 2 அல்லது 3 முட்டை சாப்பிடலாம். 

பொதுவாக முட்டையின் வெள்ளைக்கரு மட்டும் 

சாப்பிடுவதாக இருந்தால் 3 அல்லது 4 வரை 

சாப்பிடலாம்.

மஞ்சள் கரு சாப்பிடுவதாக இருந்தால், தினமும் 

ஒன்று சாப்பிட்டால் போதும். தேவையான 

வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் உடலுக்கு 

நல்லது செய்யும் கொழுப்பு அமிலமான 

ஒமேகா3 

ஆகியவை இருந்தாலும், சில கெட்ட 

கொழுப்புச்சத்துகளும் அடங்கியிருப்பதால் 

மஞ்சள் கருவை அதிகமாக சாப்பிடக்கூடாது.

இரவு நேரத்தில் முட்டை சாப்பிடக்கூடாது என்று 

சிலர் சொல்வதுண்டு. இரவு நேரத்தில் முட்டை 

சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால், தூங்கப் 

போவதற்கு 2 மணி நேரத்துக்கு முன் சாப்பிட 

வேண்டும். மஞ்சள் கருவையும் சேர்த்து 

முட்டைகளை அதிகமாக சாப்பிடுபவர்களின் 

உடலில் கொழுப்புச் சத்து அளவு அதிகமாகி, 

இதய நோய்கள் வரக்கூடும். தேவையான 

உடற்பயிற்சிகள் செய்துவிட்டு அதன் பின்னர் 

முட்டை சாப்பிடுவது உடல் வலிமையை 

கூட்டும்.

முட்டையை அதிக நேரம் சமைக்கக் கூடாது. 1015 

நிமிடங்கள் கடாயில் போட்டு வறுத்தால் 

ஒருவித வாசனை வரும். முட்டை அதன் 

இயற்கைத் தன்மையை இழந்துவிடும். 

தண்ணீரில் போட்டு அவித்துச் சாப்பிடும் 

முட்டையே ஆரோக்கியத்துக்கு உகந்தது. 

கொதிக்கும் தண்ணீரில் முட்டையை உடைத்து 

ஊற்றி Pouched egg தயாரிப்பார்கள்.


இதுவும் உடல்நலத்துக்கு ஏற்றது. காய்கறிகளை 

நறுக்கிப்போட்டு, அதில் முட்டையை உடைத்து 

ஊற்றி ஆம்லெட் தயாரித்தும் சாப்பிடலாம். 

ஹாஃப் பாயிலோ, ஆம்லெட்டோ... அதிகமாக 

வேக வைக்காமல் சாப்பிடுவதுதான் சிறந்தது. 

முட்டையில் இருக்கும் புரதங்களை உடல் 

எளிதாக ஏற்றுக்கொள்ளும். ஆதலால், முட்டை 

சாப்பிடுங்கள்... உடலுக்கு தேவையான 

பயிற்சிகளையும் கொடுங்கள்!’’

கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்கள் 

ஒரு நாளைக்கு ஒரு முட்டை எடுத்துக் 

கொண்டாலே போதும்!

காஞ்சிபுரம் இட்லி + கொத்ஸு

தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி(இட்லி) ஒரு கிண்ணம்
பச்சை அரிசி ஒரு கிண்ணம்
முழு உளுந்து தோல் நீக்கியது ஒரு கிண்ணம்
மூன்றையும் கலந்து களைந்து ஊற வைக்கவும். நான்கு மணி நேரம் ஊறியதும் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். ரொம்பவே நைஸாகவும் கூடாது. ரொம்பக் கொரகொரப்பாகவும் கூடாது. ரவை போல் அரைக்கவும்.
சுக்கு, மிளகு, ஜீரகம் ஒன்றிரண்டாக உடைத்துக்கொண்டது இரண்டு டீஸ்பூன், உப்பு, நெய்.
தாளிக்க எண்ணெய் அல்லது நெய், 2 டேபிள் ஸ்பூன், கடுகு, உ.பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரிப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் (எல்லாம் சேர்த்து) இஞ்சி தேவையானால் ஒரு துண்டு. கருகப்பிலை, கொத்துமல்லிபொடிப்பொடியாக நறுக்கியது இரண்டு டீஸ்பூன்.
ஊற வைத்த பட்டாணி, துருவிய காரட்(தேவையானால் மாவில் கலக்கலாம். இது அவரவர் விருப்பம்போல். தேங்காயும் பல்லுப் பல்லாகக்கீறிச் சேர்க்கலாம்)
இப்போது அரைத்த மாவில் பொடித்த சுக்கு, மிளகு, ஜீரகக்கலவையோடு உப்பையும் போட்டு நெய்யையும் விட்டுக் கலந்து புளிக்க வைக்கவும்.
மறுநாள் இட்லி செய்யும் முன்னர் தாளிக்க எண்ணெய் அல்லது நெய் ஊற்றிக்கொண்டு அதில் தாளிக்கும் பொருட்களைப் போட்டுத் தாளித்துக் கொட்டி மாவில் கலக்கவும். தேவையானால் ஊற வைத்த பட்டாணி, காரட், தேங்காய்க் கீறல் சேர்க்கலாம்.
இட்லிப் பாத்திரம் அல்லது இட்லிக்குக்கரில் நீரை ஊற்றிச் சூடாக்கவும். நீர் கொதித்து வந்ததும், இட்லித்தட்டுக்களில் நன்றாகத் ததும்ப எண்ணெய் தடவி மாவை ஊற்றவும். எல்லாத்தட்டுக்களையும் குக்கரினுள் அடுக்கிவிட்டு மூடி வைக்கவும். இட்லி வேகப் பத்து நிமிடங்கள் ஆகும். பின்னர் வெளியே எடுத்து சுவையான சட்னி அல்லது கொத்சோடு பரிமாறவும்.
கொத்சு:
தேவையான பொருட்கள்: புளி ஒரு எலுமிச்சை அளவுக்கு ஊற வைத்துக் கரைத்து வடிகட்டிய நீர் இரண்டு கிண்ணம். உப்பு, மிளகாய் வற்றல் 3, பச்சை மிளகாய் 2 அல்லது 3. மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை, பெருங்காயம் ஒரு துண்டு. கடுகு, உ.பருப்பு, கடலைப்பருப்பு, கருகப்பிலை. கத்தரிக்காய் நடுத்தரமாக ஒன்று, சின்ன வெங்காயம் பத்துப் பனிரண்டு, அல்லது ஒரு நடுத்தரப் பெரிய வெங்காயம், தக்காளி ஒன்று. பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தாளிக்க எண்ணெய்.
அடுப்பில் கடாய் அல்லது நான் ஸ்டிக் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களைப் போட்டுத் தாளிக்கவும். பின்னர் முதலில் வெங்காயத்தைப் போட்டு வதக்கிவிட்டுப் பின் கத்தரிக்காய், தக்காளி போன்றவற்றையும் போட்டு நன்கு வதக்கவும். மஞ்சள் பொடி சேர்த்துத் தேவையானால் ஒரு ஸ்பூன் சாம்பார் பொடி சேர்க்கவும். புளிக்கரைசலை ஊற்றி உப்புச் சேர்க்கவும். சேர்ந்து கொதித்ததும் கீழே இறக்கி சூடான இட்லியுடன் பரிமாறவும்

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

அடித்த முட்டைக்குழம்பு

அடித்த முட்டைக்குழம்பு / Beaten Egg cube curry

அடித்த முட்டைக்குழம்பு:

நாம் சாதாரணமாக செய்யும் முட்டைக்குழம்பு 
முழு முட்டையை அவித்து, காரக்குழம்பு 
செய்வது போல் அல்லாமல், இது 
அடித்தமுட்டையில், பொடியாக வெட்டிய 
வெங்காயம் சேர்த்து வேகவைத்து, சதுரமாக 
வெட்டி குழம்பில் சேர்க்கிறோம். இதனால் 
முட்டையின் வாடை குறைந்து குழம்பை நன்கு 
உறுஞ்சி அந்த முட்டை உண்ணும் பொழுது 
சுவை அதிகரித்துள்ளதை உணரலாம்.
அடித்த முட்டைக்குழம்பு:
அடித்த முட்டைக்குழம்பு
தேவையான பொருட்கள் -1 :
முட்டை-3
வெங்காயம்-1
குடைமிளகாய் -1 தேவைப்பட்டால்
மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
உப்பு-1/4 தேக்கரண்டி
மிளகுத்தூள் -1/4 தேக்கரண்டி

தேவையான பொருட்கள் -2
சின்ன வெங்காயம் -9
பூண்டு-7
தக்காளி-1 பெரியது
கறிவேப்பிலை, புளிச்சாறு-2
11902372_941852649189679_1647508677_o (1)
தாளிக்க:
எண்ணெய் -5 தேக்கரண்டி
சோம்பு-1/2 தேக்கரண்டி
சீரகம் 1/2 தேக்கரண்டி
வெந்தயம் 1/4 தேக்கரண்டி

செய்முறை:
1. ஒரு பத்திரத்தில் முட்டையை உடைத்து 
ஊற்றிக்கொள்ளவும், பொடியாக வெட்டியா 
வெங்காயம் .
2. குடைமிளகாய், உப்பு, மஞ்சள் தூள் 
மிளகுத்தூள் சேர்த்து நன்கு 
அடித்துக்கொள்ளவும் .
3. அகலமான ஒரு பானில் எண்ணெய் தடவி 
அடித்த முட்டைக்கலவையை ஊற்றவும்.
11872729_941852739189670_1316172343_n
4. இட்லி பத்திரத்தில் தண்ணீர் கொதிக்க 
வைத்து, ஆவியில் வேகவைத்து 
எடுத்துக்கொள்ளவும்.

11911455_941852702523007_2028394596_n
5. ஆறியதும் சதுரமாக 
வெட்டிவைதுக்கொள்ளவும்.
dsc08040 (1)
6. மற்றொரு கடாயில் எண்ணெய் காய வைத்து 
தாளிதம் சேர்த்து தாளித்துக்கொள்ளவும்.
7.வெட்டிய வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை 
சேர்த்து நன்கு வதக்கவும் 
பொன்னிறமாகவதக்கவும்.
8. மிளகாய்ப்பொடி, மஞ்சள்தூள் உப்பு,கரைத்த 
புளிச்சாறு சேர்க்கவும், 1 1/2 டம்ளர் தண்ணீர் 
சேர்த்துக்கொதிக்க விடவும்,
11872600_941852645856346_1959221129_n
9.  5 நிமிடம் கொதித்த பின்னர் வேகவைத்து 
வெட்டிய முட்டையை சேர்த்து இன்னும் 3 
நிமிடம் கொதிக்க விடவும்.
11924721_941852619189682_1616603713_nசுவையான அடித்த முட்டைக்குழம்பு ரெடி