ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

சிக்கன் அடை

சிக்கன் வடை க்கான பட முடிவு



சிக்கன் அடை
என்னென்ன தேவை?

சிக்கன் - கால் கிலோ

முட்டை - ஒன்று

பச்சை மிளகாய் - 2

பெரிய வெங்காயம் - 6

இஞ்சி - சிறியதுண்டு

சிறிய வெங்காயம் - 10 பல்

தேங்காய் துருவல் - 1 1/2 கப்

மஞ்ச்ள் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய் - 1/2 கப்

உப்பு - 1 தேக்கரண்டி

கறி மசாலாத்தூள் - 1 தேக்கரண்டி

எப்படி செய்வது?


பச்சை மிளகாய், பெரிய 

வெங்காயம் 

இரண்டையும் பொடியதாக 

நறுக்கவும். இஞ்சி, சிறிய 


வெங்காயம் ,தேங்காய் 

மூன்றையும் 


தனித்தனியாக அரைத்து வைத்துக் 


கொள்ளவும். பச்சை மிளகாயைத் 

தூளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு 

பாத்திரத்தில் அரைத்த சிக்கன், 

நறுக்கின வெங்காயம் சேர்த்து 

முட்டையை உடைத்து ஊற்றவும். 


அதனுடன் நறுக்கின 

கறிவேப்பிலை, 

பச்சை மிளகாய் ஆகியவற்றை 

சேர்க்கவும். அரைத்து வைத்துள்ள 

தேங்காய்ப்பூவையும் சேர்க்கவும்.


பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் 

ஊற்றி காய்ந்ததும் சிறிது சிறிதாக 

மாவை எடுத்து, அடைகளாக தட்டிப் 

போட்டு இரண்டு நிமிடம் 

வேகவிடவும். தாச்சியின் அளவைப் 

பொறுத்து ஒரு முறைக்கு 4 அல்லது 

5 வடைகள் தட்டிப் போடவும். சுமார் 

3 நிமிடங்கள் கழித்து அடைகள் 

வெந்ததும் எடுத்து விடவும். 

அடுப்பை குறைந்த தீயில் வைத்து 

இதனைச் செய்யவும்.

மீன் வறுவல்

மீன் வறுவல் க்கான பட முடிவு



மசாலா மீன் வறுவல் !!
என்னென்ன தேவை?

மீன் - 8 துண்டுகள

இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

சிறிய வெங்காயம் - 8

கருவேப்பிலை - 4 கொத்து

மல்லிதழை - 2 அல்லது 4 கொத்து

எலுமிச்சம்பழசாறு - 2 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி

சீரகத்தூள் - 1 தேக்கரண்டி

மல்லித்தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள்தூள் - 1 /2 தேக்கரண்டி

மைதா - 4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிக்க

எப்படிச் செய்வது?

வெங்காயம், கருவேப்பிலை, மல்லிதழை 

ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும். 

எலுமிச்சம்பழசாறு ,மிளகாய்த்தூள்,சீரகத்தூள், 

மல்லித்தூள், மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு 

விழுது, 

உப்பு, அரைத்த மசாலா சேர்த்து திக்கான 

மசாலா 

செய்து கொள்ளவும். மீன் துண்டின் இரு 

புறங்களிலும் மசாலா கலவையை தடவி 

விடவும். அதன் மேலே மைதா மாவை தூவி 1 

மணி மேரம் வரை ஊற வைக்கவும். கடாயில் 

எண்ணெய் ஊற்றி சூடானதும் , மிதமான சூட்டில் 

மீனை இரு புறமும் பொரித்தெடுக்கவும்.

சனி, 25 ஏப்ரல், 2015

உருளைக்கிழங்கு வதக்கல்

உருளைக்கிழங்கு வதக்கல் க்கான பட முடிவு



உருளைக்கிழங்கு வதக்கல்
என்னென்ன தேவை?
உருளைக்கிழங்கு - 3, 
பெரிய வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 2,
பெருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
தனி வத்தல் பொடி - 1 டீஸ்பூன்,
தனியா தூள் - 1 டீஸ்பூன்,
கறிமசால் பொடி - 1/2 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய தேங்காய் - 1/2 மூடி,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிது.
எப்படிச் செய்வது?
உருளைக்கிழங்கை தோலெடுத்து நன்றாகக் கழுவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, பெருஞ்சீரகம் போட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். உருளைக்கிழங்கு சேர்த்து பாதி வதங்கும் போது சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும். நீர் தெளிந்து நன்றாக வதங்கி வரும்போது பொடிகள் அனைத்தையும் சேர்க்கவும். உப்புச் சேர்க்கவும். தேங்காயை சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் வதக்கி இறக்கி வைக்கவும். தேங்காய் விரும்பாதவர்கள் தேங்காய் போடாமலும் செய்யலாம். கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான உருளைக்கிழங்கு வதக்கல் தயார்.

வெள்ளி, 24 ஏப்ரல், 2015

கோலா உருண்டைக் குழம்பு !!











இது செட்டிநாட்டின் கைவண்ணம்

கோலா உருண்டைக் குழம்பு !!

என்னென்ன தேவை?

கடலைப் பருப்பு - 100 கிராம், 
சின்ன வெங்காயம் - 10,
பச்சை மிளகாய் - 4,
பொடியாக நறுக்கிய தேங்காய் - சிறிது,
கறிமசால் பொடி - தேவைக்கு,
கறிவேப்பிலை, கொத்த மல்லி இலை - சிறிது,
உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?
கடலைப் பருப்பை இரண்டு மணிநேரம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் உப்பு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய், கறிவேப்பிலை சேர்த்துப் பிசைந்து சின்ன உருண்டைகளாக செய்து வைத்துக் கொள்ளவும். குழம்பு நன்றாகக் கொதித்ததும் பிடித்து வைத்த உருண்டைகளை அதில் போடவும். கறிமசால் பொடி சேர்க்கவும். குழம்பை சிம்மில் வைத்து உருண்டைகள் நன்றாகப் பக்குவமாக வெந்து வரும்போது இறக்கி கொத்தமல்லி இலை தூவிப் பரிமாறவும்.

கோலா உருண்டைக்குழம்பு தயார்.

வியாழன், 23 ஏப்ரல், 2015

Chettinad Prawn Masala




Chettinad Prawn Masala
Ingredients:-
Fresh Prawns-30 nos 
Onions-1 nos (finely chopped)
Curry leaves-few
Red chillie powder-1 tsp
Garam masala powder-1/2 tsp
Chicken masala powder-2 tsp (optional)
Turmeric powder-1/2 tsp
For grinding:-
Fennel seeds-3 tsp
Grated coconut-1 tbsp
Tomato-1 nos (chopped)
Green chillies-3 to 4 nos
Ginger-small pieces
Garlic cloves-4 to 5 nos
Method:-
Clean the Prawns and marinate with add chillies powder,turmeric powder and salt mix well keep it aside for 30 mins.
Grind all the grinding ingredients to make a fine paste and keep it aside
Saute the onions until golden color,add curry leaves.Now add the ground paste and saute well.
Once the raw flavor of the spices have worn off,add in the chilli powder,chicken masala,garam masala mix well and fry for 3 to 4 minutes.
Add the prawns and fry.Note that prawns get cooked fast and excess cooking might make them rubbery.Mix well and When prawns is cooked fry for 2 minutes.Switch of the flame.

chettinad foods


தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எந்த உணவு சிறப்பு என்று ருசியுங்கள்..!
1. சிம்மக்கல் கறி தோசை, கோலா உருண்டை
2. நடுக்கடை : இடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா
3. சிதம்பரம் கொத்சு
4. புத்தூர் அசைவச் சாப்பாடும் கெட்டித் தயிரும்
5. திருவானைக்கா ஒரு ஜோடி நெய் தோசை
6. கும்பகோணம் பூரி-பாஸந்தி
7. ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம்
8. மன்னார்குடி அல்வா
9. கூத்தாநல்லூர் தம்ரூட்
10. நீடாமங்கலம் பால்திரட்டு
11. திருவையாறு அசோகா
12. கும்பகோணம் டிகிரி காபி
13. விருதுநகர் பொரிச்ச பரோட்டா
14. கோவில்பட்டி கடலை மிட்டாய்
15. ஆம்பூர் தம் பிரியாணி
16. நாகர்கோவில் அடை அவியல்
17. சாத்தூர் சீவல்
18. திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா
19. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா
20. செங்கோட்டை பார்டர் கடை பரோட்டா, நாட்டுக் கோழி வறுவ ல்
21. மணப்பாறை அரிசி முறுக்கு
22. கீழக்கரை ரொதல்அல்வா
23. திண்டுக்கல் தலப்பாக் கட்டி நாயுடு பிரியாணி
24. பண்ருட்டி முந்திரி சாம்பார்
25. மதுரை ஜிகர்தண்டா மற்றும் பருத்திப்பால்
26. சாயல்குடி கருப்பட்டி காபி
27. பரமக்குடி சிலோன் பரோட்டா, சிக்கன் சால்னா
28. பழனி சித்தநாதன் பஞ்சாமிர்தம்
29. கமுதி மாரியம்மன் பால் பண்ணை லஸ்ஸி
30. ‪#‎புதுக்கோட்டை_முட்டை_மாஸ்‬
31. தூத்துக்குடி மக்ரூன்
32. சௌக்கார் பேட்டை மன்சுக்லால் சேட் டோக்லா மற்றும் கச்சோடி
33. கன்னியாகுமரி தேங்காய் சாதம், மீன் குழம்பு
34. ராமநாதபுரம் கணவாய் கோலா உருண்டை, இறால் ஊறுகாய்
35. ஈழத் தமிழர்கள் சோதி மற்றும் தேங்காய்ப் பால்
36. செட்டிநாடு - ஒவ்வொரு ஊருக்கும் ஏதாவது ஒன்று
சிறப்பா இருக்கும், ஆனா நம்ம ‘செட்டி நாட்டுலே’ மட்டும்தாங்க செய்யிற எல்லா உணவுமே சிறப்பா யிருக்கும்.
அப்படிபட்ட செட்டி நாடு உணவு வகைகளில் சில..
1. குழிப்பணியாரம்
2. வாழைப்பழ தோசை
3. எண்ணெய் கத்தரிக்காய்
4. பால் பணியாரம்
5. பூண்டு வெங்காய குழம்பு
6. ரவா பணியாரம்
7. பால் கொழுக்கட்டை
8. சேமியா கேசரி
9. மோர் குழம்பு
10. நாட்டுகோழி மிளகு வறுவல்
11. இறால் தொக்கு
12. நாட்டுக் கோழி ரசம்
13. நண்டு மசாலா
14. வெண்டைக்காய் புளிக்கறி
15. பருப்பு சூப்
16. ரிப்பன் பக்கோடா
17. பருப்பு உருண்டை குழம்பு
18. குருமா குழம்பு
19. தேன்குழல்
20. கருப்பட்டி பணியாரம்
21. சீயம்
22. மாவுருண்டை
உணவுக்காக, உணவுப் பொருட்களுக்காக போர் புரிந்த கதை எல்லாம் நம்ம ஊரிலே மட்டும் தான் எப்படி நடந்துச்சுனு இப்ப தெரியுதா? அவ்வளவு ஏன்..
கொலம்பஸுகளும் வாஸ்கோடமாக்களும் இந்தியாவை தேடி எதுக்கு அலைஞ்சாங்க?.. இங்கே கொட்டி கிடந்த வேறு எங்குமே கிடைக்காத 'மசாலா' பொருட்களுக்காக மட்டுமேதான்னுங்கிறது நிதர்சமான உண்மை.
"வாழ்க்கையின் ரசனையை உணவில் காணும் சாப்பாட்டு பிரியர்களுக்காக.. இந்த தொகுப்பு சமர்ப்பணம்.