வியாழன், 13 ஆகஸ்ட், 2015

இட்லி

இட்லி செய்முறை பற்றி திருமதி தையுபாவின் அசத்தல் பேட்டி!! ஒரு சிறப்பு பார்வை..
இல்லத்தரசிகளின் பார்வையில் இம்சையான உணவும் எல்லோருக்கும் ஏற்ற எளிமையான உணவுநாம் அடிக்கடி சாப்பிடும் டிபன் இட்லிதான். இட்லி என்பது எப்போதாவது தான் அதன் லட்சணங்களுடன் வந்து அசத்தும். பல நேரங்களில் அது பந்து மாதிரி, கல் மாதிரி, இன்னும் ஏதேதோ மாதிரியெல்லாம் தன் அடையாளம் இழந்து எரிச்சலைக் கிளப்பும். வெள்ளை வெளேர் நிறத்தில், பஞ்சு மாதிரியான, மெத்தென்ற இட்லி வீடுகளில் சாத்தியப்படாதா என்கிற பலரின் ஆதங்கத்துக்குப் பதில் வைத்திருக்கிறார் மதுரையைச் சேர்ந்த என் மனைவி திருமதி தையுபா.
‘தரமான அரிசி, உளுந்தைத் தேர்ந்தெடுக்கிறதுலேர்ந்து, அரைக்கிறது, கரைக்கிறது வரைக்கும் இட்லி மிருதுவா வர பல விஷயங்கள் இருக்கு. அதையெல்லாம் சரியா பண்ணினாலே, வீட்லயும் மெது மெது இட்லி வரும்’’ என்கிறார் திருமதி தையுபா. இவர் இரண்டு முறைகளில் இட்லி செய்யும் செய்முறையை இங்கே விவரிக்கிறார்..
முதல் முறை 1:
என்னென்ன தேவை...
தேவையானவை பொருட்கள்
இட்லி அரிசி அல்லது புழுங்கலரிசி- 4 டம்ளர்
உடைத்த வெள்ளை உளுத்தம்பருப்பு – 1 டம்ளர்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
அவல்- ஒரு கைப்பிடி
எப்படிச் செய்வது?
செய்முறை : 
1. இட்லி அரிசி என்றால் 5 மணி நேரம் ஊறினால் போதும், புழுங்கலரிசி என்றால் முந்தின நாள் இரவே ஊற விடவும்.
2. வெள்ளை உளுத்தம்பருப்பு ஒரு மணி நேரம் ஊறினால் போதும், ஊறின பிறகு பருப்பைக் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து விடவும்.
3. அரிசியைக் களைந்து மின் அரைப்பானில்(கிரைண்டர்) போடவும், இதனுடன் அவல், வெந்தயத்தையும் சேர்த்து தண்ணீர் விட்டு அரைக்க விடவும்.
4. இருபத்தைந்து நிமிடங்கள் அரைபட வேண்டும்,(ஊறின நேரம் குறைவு என்றால் கூட நேரம்). அடிக்கடி தண்ணீர் விட்டு வர வேண்டும். நன்றாக மையாக அரைபட வேண்டுமென்ற அவசியமில்லை. பிறகு அதனை வேறொரு பாத்திரத்தில் போட்டு விட்டு வெள்ளை உளுத்தம்பருப்பைக் களைந்து போட வேண்டும்.
5. தண்ணீர் அதிகம் ஊற்றாமல் மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை கொஞ்சமாக ஊற்ற வேண்டும்,
6. பருப்பு வெண்ணெயாக அரைபடுவதில் தான் சூட்சமமே அடங்கியிருக்கிறது.
7. பிறகு உப்பைப் அரைபட்ட பருப்புமாவில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
8. அரைத்த மாவையும் இந்த உளுத்தம்மாவையும் ஒன்று கலக்கவும், ஆற்றவும். தனித்தனிப் பாத்திரங்களில் முக்கால்வாசி அளவு வருமாறு(பொங்கும், புளிக்கும் என்பதால்) விட்டு வெளியில் வைக்கவும், குளிர்காலங்களில் புளிக்காது என்பதால் அவனில் வைத்துக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக