
Cashew halwa
முந்தரி ஹல்வா
தேவையானவை:
1cup முந்தரி விழுது (150gm முந்திரியை
ஊறவைத்து, கொஞ்சம் பாலில் அரைத்து
வைக்கவும் )
2cup சர்க்கரை
2 1 /2cup சக்கரை இல்லாத கோவா
2sp நெய்
2sp முந்திரி உடைத்து
சிறிதளவு ஏலப்பொடி (தேவையானால் )
பால் சிறிதளவு
செய்முறை:
ஒரு அடிகனமான பாத்திரத்தில், முந்தரி விழுது,
நெய் போட்டு அடுப்பில் வைக்கவும்.
அடுப்பை நிதானமாக எரியவிடவும்,
கிளறிக்கொண்டே இருக்கவும்.
இப்பொழுது கோவாவை துருவி அல்லது
உதிருதுப்போடவும்.
நன்கு கிளறவும், கொஞ்சம் கெட்டியாகும்போது,
சிறிது சிறிதாக நெய் விட்டு கிளறவும்.
சர்க்கரை சேர்க்கவும்.
கைவிடாமல் கிளறவும்.
நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது
ஏலப்பொடி, உடைத்துவைதுள்ள முந்தரி தூவி,
கிளறி இறக்கவும்.
சுவையான முந்தரி ஹல்வா தயார்.
குறிப்பு: வெறும் முந்தரி விழுது போடும் இந்த
ஹல்வா செய்யலாம. (பாதாம்
ஹல்வா) போலவே.
சர்க்கரை இல்லாத கோவா கடையில்
வாங்கினாலும் ஓகே அல்லது, ஒரு லிட்டர்
பாலை சுண்டக் காய்ச்சியும் நாமே
தயாரிக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக